கிழக்கில் கூட்டமைப்பின் வியூகம்; திருமலை விஜயமாம் - சம்பந்தன்!
புதிய அரசியல் அமைப்பிற்கு ஆதரவு நல்கவும், உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றி கொள்வதற்குமான வியூகங்களை வகுக்கவும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீவிர பிரச்சார நடவடிக்கைகளில் செயற்படவு ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்க்க ட்சி தலைவரும், தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் தவைருமான இரா. சம்பந்தன் தலைமையில் இன்று முதல் ஆரம்பம். கொழும்பில் இருந்து நேற்றையதினம் கிழக்கு மாகாண த்தின் திருகோணமலை மாவட்டத்தி ற்கு புறப்பட்ட இரா.சம்பந்தன், மக்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இச் சந்திப்பின்போது புதிய அரசியல் அமைப்பு குறித்தும், உள்ளூராட்சிசபை தேர்தலில் வெற்றி கொள்வது தொட ர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.
இவ் விடயங்கள் தொடர்பான அடுத்தகட்ட சந்திப்புக்கள் நாளைய தினம் மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் ஆரம்ப மாகவுள்ளன.
கூட்டமைப்பின் தலைமையுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் பங்கு கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.