Breaking News

சிங்கக் கொடியை ஏற்ற மறுத்த சர்வேஸ்வரன் மீது குற்றச்சாட்டு - றெஜினோல்ட் குரே

சிங்கக் கொடியை கொடியை ஏற்ற மறுத்த வடக்கு மாகாண கல்வி அமை ச்சருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஏனைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு பாடமாக  அமையுமென வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.  

இவ் விடயத்தை நேற்று (21) செவ்வா ய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தி த்த போதே தெரிவித்தார். மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டமா அதி பர் திணைக்களத்திடம் வடக்கு ஆளுநர் நேற்றுமுன்தினம் (20) ஒப்படைத்திரு ந்தார். சட்டமா அதிபர் வழங்கும் ஆலோ சனைக்கு அமைவாகவே அமைச்சர் சர்வேஸ்வரன் மீது நடவடிக்கை எடு க்கப்படுமென  ஆளுநர் குறிப்பிட்டார். வவுனியா – ஈரப்பெரியகுளத்தில் உள்ள பரகும்பா மகாவித்தியாலய என்ற சிங்களப் பாடசாலையில் கடந்தவாரம் வசதி குறைந்த மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்று ள்ளது. 


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அழைக்கப்ப ட்டார். எனினும் அவர் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவி த்ததால் கல்வி அதிகாரிகள் அதனை ஏற்றியிருந்தனர். 

இதையடுத்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் அரசியலமைப்பை மீறி விட்டதாகவும் அவர் மீது வட மாகாண ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டு மெனத் தென்னிலங்கையில் இருந்து குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன.