சர்வதேச ஆண்கள் தினம் இன்று !
சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் திகதி கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே.ஆண்கள் தினமும் முறையே கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆண்களால் விடுக்கப்பட்டது.
சா்வதேக மகளீர் தினத்தில் பெண்கள் போற்ற ப்படுவதைப் போன்று, உலகில் ஆண்களை கெளரவப்படுத்தவும், ஆண்களின் உாிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணா்வு கரு தியும் சா்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.
நவம்பா் 19ஆம் திகதியான இன்று சா்வதேச ஆண்கள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஐ.நா சபையில் அங்கீகரிக்கப்பட்ட இந்த தினம், 1999-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் டொபாகோ (Trinidad and Tobago) நாட்டில் தொடங்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதால் உலகப் பெண்களின் சாத னைகள் வெளிச்சத்து க்கு வரும் தினமாக அது இருந்து வருகின்றது. பெண்க ளின் சக்தியை, அதன் மகத்துவத்தை ஆண்கள் உணரத் தொடங்கி விட்டதால், ஆண்கள் தினத்தை பெண்கள் வரவேற்கவே செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது சற்று மாறி, சாதிக்கும் பெண்களின் பக்கபலமாக இருந்து வருகிறார்கள் தன்ன லமற்ற ஆண்கள். வாழ்க்கை முறை உள்ளிட்ட பல சந்தா்ப்பங்களில் போற்ற க்கூடிய அளவிலான, மகத்தான தியாகங்களை மேற்கொண்டு வரும் ஆண்கள் குலத்தின் பெருமையை, சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவுப்ப டுத்தும் நாளாகவும் அமைவதோடு, பல்வேறுபட்ட நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.