சமூக விரோதிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள்- நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு !
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வாள்வெட்டு, குழு மோதல் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வடமாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவசர நிபந்தனையை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்.மேல் நீதி மன்ற நீதிபதி, அரச சட்டவாதி நாக ரட்ணம் நிஷாந் மற்றும் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற விஷேட கூட் டத்திலேயே மேற்படி பணிப்புரையா னது நீதிபதியால் வழங்கப்பட்டு ள்ளது. இக்கூட்டத்தில் வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னா ண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட் சகர் சென விரட்ண, பொலிஸ் அத்தி யட்சகர் அம்பேபிட்டிய மற்றும் யாழ்.தலைமை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் ஹெமா விதாரண ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
விஷேட கலந்துரையாடல் ஆரம்பமான போது, வடமாகாண பிரதி பொலி ஸ்மா அதிபர் தற்போது யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு கலா சாரத்தை நிறுத்தும் வகையில் விஷேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப ட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களை மிக அவதானமாக கவ னித்துக் கொண்டிருந்த நீதிபதி அவசர பணிப்புரைகளை விடுத்தார்.
தொடர்ச்சியாக வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெறுவது சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடுகின்ற செயற்பாடாகவே உள்ளது. இதனை உடனடியாக கட்டுப்பா ட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகவுள்ள இவ் வாள்வெட்டு கலாசாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தி இத்தகைய சமூக விரோத, சமூகத்த வர்களுக்கு அச்சுறுத்தலான வாள்வெட்டுச் செயற்பாடுகளில் செயற்படுபவ ர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அவசர நிபந்தனை விதிக்கப்பட்டு ள்ளது.