Breaking News

அரியாலை அதிரடிப்படைச் சந்தேகிகளை சாட்சி அடையாளம் காட்டவில்லை!

அரியாலையில் இளைஞனைச் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் விளக்கமறிய லில் உள்ள சிறப்பு அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் இருவரையும் சாட்சி இனம் காட்டவில்லை. 

கடந்த மாதம் 22 ஆம் திகதி அரியா லை மணியந்தோட்டம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் சுட்டு க்கொல்லப்பட்டார். இந்நிலையில் சிசிரிவி கமராவில் பதிவான காட்சி யின் அடிப்படையில் கொலையாளி பயணித்த முச்சக்கர வண்டி யாழ்ப்பா ணம் பண்ணையில் அமைந்துள்ள அதிரடிப்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதனடிப்படையில், குறி த்த முகாமைச் சேர்ந்த இரு சிறப்பு அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்நிலையில் யாழ்ப்பா ணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ் சதீஸ்கரன் முன்னிலையில் அடை யாள அணிவகுப்பு  நடைபெற்றுள்ளது.

இதன்போது குறித்த வழக்கின் நேரடிச் சாட்சி, சந்தேக நபர்களை அடையாளம் காட்டாத நிலையில் குறித்த இருவரையும் எதிர்வரும் முப்பதாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ்.சதீஸ்கரன்உத்தர விட்டுள்ளார்.