விவேக் வீட்டில் துப்பாக்கியாம் வருமானவரி புலனாய்வு அமைப்பு பகீர்வு !
ஜெயா தொலைக்காட்சியின் செயல் நிர்வாக இயக்குனர் விவேக் வீட்டில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டவேளை விவேக் இல்லத்தில் இருந்து மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாகவும் அதில் ஒன்று கள்ளத்துப்பாகியெனவும் தெரிவிக்கப்படு கின்றது.
சமூகத்தில் கூடிய அந்தஸ்தில் இரு ப்பவர்கள் உரிமம் பெற்று துப்பா க்கியை வைத்துக்கொள்வதில் தவறி ல்லை. இருப்பினும் விவேக் இல்ல த்தில் இருந்து கள்ளத்துப்பாக்கி கைப ற்றப்பட்டதாக சந்தேகம் எழுந்து ள்ளது.
இதுகுறித்து ஒரு அதிகாரியிடம் விசாரிக்கையில் கள்ளத்துப்பாக்கி எதுவும் கைபற்றப்படவில்லையென தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த விவேக் வருமான வரித்துறையின் சோதனை நியாயமானதென தெரிவிக்கப்படுகின்றது.