சிங்க கொடியேற்ற மறுத்த வடக்கு அமைச்சருக்கு நடவடிக்கை?
வவுனியாவில் உள்ள சிங்கள பாடசாலையான பரக்கும் மகா வித்தியாலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஷ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தமை தெரிந்ததே.
இந்த நிலையில் இது தொடர்பாக ஆட்சேபனை அடைந்துள்ள வடக்கு ஆளுனர் தரப்பு இது தொடர்பாக நாளை சட்டமா அதிபருடன் ஆலோசனை நடாத்தவுள்ளதாகவும், அரசியலமைப்புக்க எதிராக செயற்பட்டதால் இது தொடர்பாக தான் கலந்துரையாடப்போவதாகவும் யாழில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.