சிறிதரன்,மாவை தீபமேற்றினால் அடி விழும்-முன்னாள் போராளிகள் எச்சரிக்கை(காணொளி)
எதிர்வரும் மாவீரர் தினத்தில் கடந்தமுறையைபோல அரசியல் வாதிகள் யாரும் துயிலுமில்லங்களில் விளக்கேற்றுவதை அனுமதிக்கப்போவதில்லை என முன்னாள் போராளிகள் தமது ஊடக சந்திப்பு ஒன்றின் மூலம் எச்சரித்துள்ளனர்.
தென்னிலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்கிவரும் தமிழ் அரசியல்வாதிகள் யாரையும் தீபமேற்றுவதற்கு அனுமதிப்பதில்லை என்றும் அதனை மீறி யாரும் தீபமேற்ற முற்பட்டால் அவர்களுக்கு எதிராக மக்களை திரட்டி போராடவுள்ளதாகவும் சிலவேளை எமது உயிரை தியாகம் செய்தேனும் அதனை தடுக்கப்போவதாக முன்னாள் போராளியாக இருந்து தற்போது சக்கர நாற்காலியில் தனது வாழ்வை நடாத்திவரும் பிரபாகரன் என்பவர் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.
கடந்த மாவீரர் தினம் வெளிநாட்டு அழுத்தங்களை குறைப்பதற்காக திடீரென அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் கிளிநொச்சி துயிலுமில்ல துப்பரவு பணிகளுக்கு சிறிதரன் மூன்று இலட்சம் ரூபா நிதி கொடுத்ததால் அவரை தீபமேற்ற அனுமதித்ததாக பசுபதிப்பிள்ளை கூறுவது தொடர்பாக கேட்டபோது, அவ்வாறாயின் கருணாவோ அல்லது கோத்தபாயவோ கூடுதலான நிதிகொடுத்தால் அவர்களை தீபமேற்ற அனுமதிக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் கிளிநொச்சியில் மாவீரர் கல்லறை அமைக்க முற்பட்டபோது இடம்பெற்ற சம்பவம் தொடர்பான காணொளி