Breaking News

மைத்திரியின் அறிவிப்பில் சந்தேகம் வெளியிடும் மாவை

புதிய அரசியலமைப்பு உருவாக்கதில் சர்வகட்சி மற்றும் சர்வமதத் தலைவர்கள் மாநாடுகளை நடத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கை காலத்தை இழுத்தடிப்பதற்கான முயற்சியாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையில் நேற்று இடம்பெற்ற வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இந்த சந்தேகத்தை வெளியிட்டார்.

கடந்த காலங்களில் இவ்வாறான பல்வேறு சர்வகட்சி மாநாடுகள் பற்றிய அனுபவங்களை கண்டிருக்கிறது.இந்நிலையில், மீண்டும் சர்வகட்சி மற்றும் சர்வமதத் தலைவர்கள் மாநாடுகளை நடத்தப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதானது காலத்தை இழுத்தடிக்கும் முயற்சியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.