Breaking News

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வரையறுக்கும் வர்த்தமானி இன்று

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை உறுதி செய்யும் வர்த்தமானியில், இன்றையதினம் கைச்சாத்திடப்படவுள்ளதாக, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதன்படி உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் இன்றுடன் நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டதன் பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றும் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா கூறியுள்ளார்.