யாழ். பல்கலையுடன் இணைந்து , பொது அமைப்புக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் வழக்குகளை தமிழ்ப் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற கோரியும், பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களிற்கு வலுச்சேர்க்கும் முகமாக, இன்று புதன்கிழமை மாலை (01.11.2017) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று, பொது அமைப்புக்களால் நடாத்தப்படவுள்ளது.