‘மஹிந்த அணியின் செயற்பாடு தலைகுனிய வைக்கின்றது’ – ஜயசூரிய !
“வெளியேறுவதாயின் வெளியேறுங்கள். அனைவருக்கும் உரையாற்றுவ தற்கு, தங்களுடைய கருத்தை இங்கே பதிவு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழ ங்கப்படும்.
சிரேஷ்ட உறுப்பினர்கள் இங்கே இரு க்கிறீர்கள். நீங்கள் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும். உங்களது செய ற்பாடு தலைகுனிய வைக்கின்றது” என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறு ப்பினர்கள் சிலரைப் பார்த்து, சபாநா யகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்புச் சபையில் நேற்று (31)இரண்டாவது நாளாகவும் நடைபெற்றுள்ளது.
விவாதத்தை ஆரம்பித்து வைத்து, ஜயம்பதி விக்ரமரத்ன உரையாற்றுகையில்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பின ர்கள் சிலர், அவருடைய உரைக்கு இடையூறு விளைவித்த வண்ணமி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“புதிய அரசமைப்பில் நாடு பிளவுபடு த்தப்படப் போவதில்லை. ஒரு சிலர் இதனைப் புரிந்து கொள்ளாமை கார ணமாக, பிரச்சினை உருவாகின்றது” என அவர் குறிப்பிட்டார். இதன்போது, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் இருக்கையிலிருந்து எழுந்து கூச்சலிட்டுள்ள னர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெ லிய ரம்புக்வெல்ல, ஜயம்பதி விக்கி ரமரத்னவின் உரையை தொடரவிடா மல் சத்தமிட்டார். இதனையடுத்து, “நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட உங்களுக்கு, இங்கே தலையீடு செய்ய முடியாது.
நாடாளுமன்றத்துக்குத் தீ மூட்டவேண்டுமென்று, நீங்கள்தான் கூறியிரு ந்தீர்கள், யாருக்கும், இங்கே உரையாற்றும் உரிமை இருக்கிறது” என,
சபாநாயகர் கரு ஜயசூரிய பகிரங்கப்படுத்தியுள்ளார்.