Breaking News

அதிகாரம் பகிரப்பட்டால் போர் வெடியாம் கோத்தா தலைமையில் !

புதிய அர­சியல் அமைப்பு நிறை­வேற்­றப்­பட்டு மாகா­ண­ச­பை­க­ளுக்கு அதி­காரம் பகி­ரப்­பட்டால் நாட்டில் 30 வரு­ட­கா­ல­மான யுத்த சூழல் மீண்டும் உரு­வாகும் என்­பதில் எவ்­வித ஐயமும் இல்லையென முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தலை­மை­தாங்கும் எதிர்­பார்ப்­புக்களை ஒளியேற்றும் அமைப்பு தெரி­வித்­துள்­ளது. 

தேசிய நூல­கத்தில் நேற்று இடம்­பெற்ற விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இதன்போது உரை­யா ற்­றிய எதிர்­பார்ப்­புக்களை ஒளியே ற்றும் அமைப்பின் செயற்­பாட்­டாளர் சிறி­யந்த மென்டிஸ் கூறு­கையில், தற் ­போது நாட்டில் புதிய அர­சியல் அமை ப்­பினை நிறை­வேற்­று­வதில் அனை­வரும் மும்­மு­ர­மாக செயற்­ப­டு­கின்­றனர். ஆனால் இந்த அர­சியல் அமைப்பு நிறை­வே­றினால் ஏற்­படும் ஆபத்­துக்கள் குறி த்து யாரும் பேசு­வ­தில்லை. மாகாண சபை­க­ளுக்கு அதி­காரம் பகி­ரப்­பட்டால் மீண்டும் நாட்டில் யுத்த அழி­வு­களே தோன்றுமென்­பதை அறிந்தும் அறி­யா­த­வர்கள் போல் காணப்படுகின்றனர். 

மாகா­ணங்­க­ளுக்கு அதி­காரம் பகி­ரப்­பட்டால் மத்­திய அர­சிற்கு மீண்டும் அதி­கா­ரத்தை பெற முடி­யாமல் போகும். அது மட்­டு­மல்­லாமல் மாகா­ண­ச­பை­க­ளுக்கு இடை­யிலும் முரண்­பா­டுகள் தோன்றும். இதனால் எதிர்­கா­லத்தில் நாட்டில் உரு­வாகும் பாதிப்­பினை அறிந்தும் அரச தலை­வர்கள் அமை­தி­யாக இருப்­பது வியக்­கத்­தக்­கது. 

நாட்டில் அதி­காரம் பகி­ரப்­பட்டால் மாகா­ண­ச­பைகள் பல­ம்­மிக்­க­தாகி மத்­திய அரசு பல­வீ­ன­ம­டையும். ஜனா­தி­பதி வெறும் நாம­நிர்­வா­கி­யா­கவே செயற்­ப­டு வார். நாட்டின் தலை­யெ­ழுத்தை மாற்­று­வதும் தற்­போது நாடு எதிர்­நோக்­க­வுள்ள அழி­வினை தடுப்­பதும் பொது­மக்­களின் கைக­ளி­லேயே தங்கியுள்ளது. 

மக்­களின் ஜன­நா­ய­கத்தை வெளிப்­ப­டுத்தும் தேர்­த­லினை முறை­யாக பயன்­ப­டுத்தி நாட்­டையும் பொது­மக்­க­ளையும் காப்பாற்றுவது மக்களின் கைகளில் உள்ளதே தவிர 225 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அல்ல. 

எனவே புதிய அரசியல் அமைப்பு நிறை வேறுவதில் உள்ள பிரச்சினைகளை மட்டும் பார்க்காமல் நிறைவேற்றினால் உருவாகும் பிரச்சினைகளை ஆரா ய்ந்து ஜனாதிபதி சிறந்த முடிவை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.