Breaking News

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன.

சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 13ஆம் திகதி மதியம் 12 மணி வரை இடம்பெறுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் தெரிவித்துள்ளார். 

வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு இன்றைய தினம் வெளியிடப்படவு ள்ள நிலையில், 93 ஆவணங்களு க்கான வேட்பமனு கோரும் பணிகள் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் வரை இட ம்பெறுமென  மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள தடைக்கமைய 203 உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் தடை ப்பட்டுள்ளது. 

ஏனைய 133 மன்றங்களின் தேர்தல்களை நடத்துவதற்கு சந்தர்ப்பம் உள்ள போதும், அவற்றில் 40 நிறுவனங்களில் நிலவும் சட்ட சிக்கல்கள் காரணமாக அவற்றின் தேர்தல்களும் பிற்போடப்பட்டுள்ளது. 

இதனால் சட்டச் சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரச்சினைகளற்ற 93 உள்ளூ ராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

சட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்காக வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணை யாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார். 

இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதியில் இருந்து 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன.