Breaking News

பொஸ்னியாவில் ஏழாயிரம் பேரைக் கொன்றழித்த ரட்கோவிற்கு ஆயுள் தண்டனை !

முன்னாள் யூகோஸ்லாவியின் ஒரு பிராந்தியமான பொஸ்னியாவின், முன்னாள் இராணுவப் பிரதானி ரட்கோ மிலாடிக்கு, நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் ஆயுள் தண்ட னை விதிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு பொஸ்னியாவில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் ஏனைய குற்றங்களை இழைத்தமை க்காக இவருக்கு ஆயுள் தண்டனை விதி க்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையினால் சுமார் 11 குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டடிருக்கும் அதேவேளை, தம் மீதான குற்றச்சாட்டுக்களை முன்னாள் இராணுவப் பிரதானி மிலாடிக் மறுத்துள்ளார். பொஸ்னிய யுத்தத்தின்போது இன அழிப்பு உள்ளிட்ட அடாவ டித்தனங்கள் பலவற்றிலும் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் பொஸ்னியாவின் முன்னாள் இராணுவத் தளபதி ரட்கோ மிலாடிக்குக்கு ஆயுள் தண்டனை விதி க்கப்பட்டுள்ளது. 

73 வயதான முன்னாள் இராணுவப் பிரதானி ரட்கோ மிலாடி, 'பொஸ்னியா வின் கசாப்புக்காரர்' என்று வர்ணிக்கப்படுகிறார். இவர், 1990களில் இடம்பெற்ற பொஸ்னிய யுத்தத்தின்போது இராணுவத் தளபதியாகப் பணியாற்றியவர். 

மேலும் ரட்கோ தலைமையிலான இரா ணுவப் படையினர் பொஸ்னியாவின் முஸ்லிம் மக்களைக் குறிவைத்துக் கொன்று குவித்தது. யுத்தத்தின் பின் 1995ஆம் ஆண்டு தலைமறைவான ரட்கோ, 2011ஆம் ஆண்டு தொலைதூர கிராமம் ஒன்றிலுள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து கைதாகியுள்ளார். 

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரட்கோவின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடைபெற்று முடிந்து நேற்று (22.11.2017) தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு வாசிக்கப்பட முன்னர், கடும் இரத்த அழுத்தத்தால் ரட்கோ பாதிக்கப்பட்டி ருப்பதாகக் கூறி நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திப்போடுமாறு ரட்கோ தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். 

எனினும் அந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டது. இதையடுத்து, 'நீதிமன்றில் நீங்கள் சொன்ன அனைத்துமே பொய்' என்று நீதிபதிகளை நோக்கிக் கூச்சலி ட்டதால், ரட்கோ நீதிமன்றை விட்டு வெளியேற்றப்பட்டதன் பின்பு  தீர்ப்பு வாசி க்கப்பட்டது. 

பொஸ்னிய முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் ஏழாயிரம் பேரைக் கொன்றமைக்குத் தலைமை வகித்த பொஸ்னிய முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பெருமளவில் பாலியல் வன்கொடுமைச் செயற்பாட்டிற்கு  உட ந்தையாக இருந்தமை, கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்ட முஸ்லிம்களை பசித்தாகத்தில் வாட்டியது, அடித்து உதைத்தது, அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டு மழை பொழிந்தது, முஸ்லிம்களை பல வந்தமாக வெளியேற்றியது மற்றும் அவர்களின் வீடுகள், பள்ளி வாசல்களைத் தரைமட்டப்படுத்தியமை தொடர்பான குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. 

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் ஐரோப்பாவில் நடைபெற்ற பெரும் இன அழிப்பாக பொஸ்னிய யுத்தம் என தெரிவிக்கப்படுகின்றது.