Breaking News

மாவீரர்களுடன் இறுதிப் போரில் உயிர் நீத்த மக்களையும் அஞ்சலிக்குமாறு அழைப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காக இம்மினத்தின் சுதந்திரத்திற்காகவும் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்க ளுடன் இறுதிக்கட்ட யுத்ததில் உயிரி ழந்த மக்களையும் நினைவுகூருமாறு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்து ள்ளார். 

மாவீரர் தினத்தை தேசிய எழுச்சி நாளாக அனுஷ்டிப்பதன் மூலமாகவே விடுதலை பெற்ற இனமாக தமிழினம் மாற்றமடைவதற்கான சந்தர்ப்பங்கள்  காணப்படுமெனத் தெரிவித்துள்ளார்.   யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போதே வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர் தினம் தொடர்பில் தனது கருத்துரையை தெரிவித்துள்ளார்.