Breaking News

“உன்னை அறைந்து விடுவேன்” என ஊடகவியலாளரை எச்சரித்த - ஞானசார தேரர்

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளருக்கு பொதுபல சேனா வின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடு த்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

நாரம்மலவில், பௌத்த பிக்கு ஒருவ ரின் தாயாரின் இறுதிச்சடங்கிற்கு சென்றிருந்த ஞானசார தேரர், அங்கு ஐலன்ட் நாளிதழின் ஊடகவியலாளர் சந்திர பிரேமவுடன் வாக்குவாதம் தொடுத்துள்ளாார். 

“நீயா சந்திர பிரேம? உன்னை அறை ந்து விடுவேன். நீ எழுதிய புத்தகத்தைப் பற்றி எனக்குத் தெரியும்.” என்று ஞானசார தேரர், அந்த ஊடகவியலாளரை கண்டித்துள்ளார். 

மேலும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் ஊடகவியலாளர் சந்திர பிரேமவை ஏனைய பிக்குகள் அந்த இடத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் அடக்கியுள்ளனர். 

தனது 30 ஆண்டு ஊடக வரலாற்றில் இதுபோன்ற அச்சுறுத்தலை எதிர்கொள்ள வில்லையென சந்திரபிரேம குறிப்பிட்டுள்ளார். ‘கோத்தாவின் போர்’ என்ற தலைப்பில், சந்திரபிரேம  வெளியீடு ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.