புதுக்குடியிருப்பில் கூட்டமைப்புக்கு நெருக்கடி! சுயேட்சையில் குதிக்க மக்கள் முடிவு!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பல இடங்களில் பரவலான எதிர்ப்புக்கள் கிளம்பி யுள்ள நிலையில் புதுக்குடியிருப்பில் மக்கள் ஒருமித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதா வது,
புதுக்குடியிருப்பு பிரதேச சபை க்கான தேர்தலை கட்சி அரசியலு க்குள் தள்ளிவிடாது சுயேட்சையாக எதிர்கொள்வதற்கு புதுக்குடியிருப்பு பிரதேச இளைஞர்கள் முடிவெடுத்து அது தொடர்பி லான சந்திப்பும் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கான வர்கள் பங்கேற்றிருந்தனர்.
அதன் போது கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி மற்றும் ரெலோ கட்சிகளின் பிரமுகர்களுக்கு வேண்டியவர்கள் பிரசன்னமாகி கூட்டத்தினை திசை திருப்ப முற்பட்டனர்.
சுயேட்சைக்குழுவில் போட்டியிடவேண்டாம் என்றும் தேர்தலில் நிற்க விரு ம்புவர்களை தருமாறும் கூட்டமைப்பின் ஊடாக அங்கத்துவத்தை பெற்று க்கொடுக்க முடியும் என்றும் கூட்டத்திலேயே பேரம்பேசப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அங்கு காரசாரமான வாக்குவதாம் இடம்பெற்றிருக்கின்றது. முன்னதாக ஊடகவியலாளர்கள் மண்டபத்திற்குள் செல்ல தமிழரசுக்கட்சி யின் கையாட்கள் ஒரு சிலர் தடைவிதித்ததுடன், ஊடகவியலாளர்களையும் தாக்கவும் முற்பட்டிருக்கின்றனர்.
இதனை அடுத்து அங்கிருந்து ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் வெளி நட ப்புச் செய்த நிலையில் முடிவின்றி கூட்டம் நிறைவுபெற்றிருக்கின்றது.
இந்நிலையில் சுயேட்சையில் தேர்தலை எதிர்கொள்பவா்கள் சந்திக்கும் கூட்டம் இன்று பிற்பகல் மீண்டும் நடைபெறுமென்று புதுக்குடியிருப்பு தக வல்கள் தெரிவிக்கின்றன.