Breaking News

அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்த யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடு தலை ரீதியலான தீர்க்கமான  நடவ டிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரையும் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு  யாழ். பல்கலைக்க ழக மாணவர்கள் பகிரங்க கோரிக்கையினை விடுத்துள்ளார்கள். 

அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக உணவு தவி ர்ப்பு போராட்டத்தை நடத்தி வரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரி க்கையை நிறைவேற்ற கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 3 ம் நாளாக கதவடைப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர். 

இதன்போதே மாணவர்களால் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமது கோரி க்கை அடங்கிய கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்கள். 

அந்த கடிதத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம், கடந்த 30 நாட்களுக்கும் மேலாக அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் 3 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென கோரி யுள்ளோமெனத் தெரிவித்துள்ளார்கள்.