Breaking News

தமிழர்களுக்கு ஏன் உரிமைகள் வழங்கப்படவில்லையாம் - சந்திரிகா கேள்வி!

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு அரசியல்வாதிகளால் தீர்வு எடுக்கப்பட்டிருந்தால் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி வந்திக்காதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விவரித்துள்ளார்.

தமிழர்களுக்கு ஏன் உரிமைகள் வழ ங்கப்படவில்லை? சந்திரிகா கேள்வி!கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே இவ்வாறான கேள்வியை எழு ப்பியுள்ளார்.

பௌத்த மக்கள் அதிகம் வாழும் இந் நாட்டில் சிறுபான்மையினரான தமிழ் மக்களின் உரிமைகள் ஏன் வழங்கப்படவில்லையென மேலும் கேள்வியெழு ப்பியுள்ளார்.

தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டிருக்குமாயின் இந் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதே வேளை, பெரும்பான்மையான மக்கள் ஒடுக்குமுறைகளை விரும்புவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.