காணாமல் போனோர் விடயத்தில் ஆணைக்குழு சேகரித்த விடயங்களுக்கு நடந்தது என்ன?
ஜனாதிபதி ஆணைக்குழுவால் சேகரிக்கப்பட்ட காணாமற்போனோர் தொட ர்பான தகவல்கள் எங்கே என வடக்கு மாகாண அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் கேள்வியை தொடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊட கவியலாளர் சந்திப்பி லேயே காணாமற்போனோர் தொடர்பான தகவல்களை புதிய விண்ணப்பங்களின் ஊடாக எதிர்வரும் டிசெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் சேகரிக்குமாறு சகல மாவட்டச் செயலா ளர்களுக்கும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் மாகாண அமைச்சர் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார்.
போரின் போதும் அதன் பின்ன ரும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோர், படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன் வைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு இருக்கையில் அவசரமாக விண்ணப்ப ங்களை அனுப்பி காணாமற்போனோர் தகவல்களை சேகரிப்பதற்கான செய ற்பாடு தான் என்ன?
காணாமற் போனோரின் உறவுகளால் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நல்லா ட்சி அரசு, இவ்வாறான அவசர செயற்பாடுகளை முன்னெடுத்து சர்வதேசத்து க்கு தாண்டவமாடுகின்றதென மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.