Breaking News

நியமனம் கிடைக்காது விடின் வாக்களிக்கப் போவதில்லை-வடக்கு மாகாண பட்டதாரிகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் புறக்கணிப்பில் செயற்படுவோமென வடக்கு மாகாண பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். 
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் அரச நிய மனம் வழங்கக்கோரி நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயல கத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போரா ட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.  

இவ்வேளை  பட்டதாரிகள் மேற்கண்ட வாறு அறிவித்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளாக சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உள்ளதாகவும் இவர்களுக்கு அரச வேலை வாய்ப்பை வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் செய ற்பட்டார்கள். 

இப் போராட்டமானது மூன்று மாதங்களுக்கும் மேலாக 143 நாட்கள் வரை நீடித்திருந்தது. இதனையடுத்து பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி உதவி யாளராக இவ் வருடத்திற்குள் நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் இன்றுவரை அவ்வாறான எந்த விதமான நடவடிக்கைகளும் முன்னெ டுக்கப்படவில்லை. இதனாலேயே நாம் தற்போது மீண்டும் போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்னர் எமக்கான அரச வேலை வாய்ப்பானது வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு வழங்கப்படா விட்டால் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலை வடமாகாண பட்டதாரிகளாகிய நாம் அனைவரும் புறக்கணிப்போமென தெரி வித்தனர்.