தமிழ் மக்களின் வாக்கை கூட்டமைப்பு மீறுவதாக ஏற்றுள்ளாராம் - எம்.ஏ.சுமந்திரன்
வடக்கு – கிழக்கில் சமஷ்டி இற்கான, மதச்சார்பற்ற முடிவாக மக்கள் தமக்கு வாக்கை வழங்கியபோது அதனை நாம் மீறிச் செயற்படும்போது அந்த மக்களே எம்மை குற்றம் சுமத்துவதாகவும், அவ்வாறு சுமத்துவது உண்மையென ஏற்றுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அரசமைப்புச்ச பைக் கூட்டம் 30.10.2017 கடந்த திங்க ட்கிழமை நடைபெற்றுள்ளது. அக்கூ ட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகை யிலே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு ஏற்றுள்ளார்.
மேலும் அங்கு உரையாற்றும்போது,
இந்த அரசமைப்பு நகல் இப்போது பூர்வாங்க நிலையில்; இருந்தாலும் கூட, இப்படி ஓர் அரசமைப்பு உருவாக்க முயற்சியில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி ஒன்று பங்க ளிப்பது இதுவே முதல் தடவை.
அரசமைப்பு புதிதாக மாற்றப்படும் என்பதைக் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவும் தெரிவித்து ள்ளார்.
ஐக்கியதேசியக்கட்சியும் தெரிவித்துள்ளது.
அவர் எப்படி அரசமைப்பைக் கொண்டு வருவார் எனக் கூறினாரோ அந்த அடிப்படையில்தான் இப்போது அரசமைப்பு கொண்டு வரப்படுகின்றது. ஆகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைப்படி 97 வீதமான மக்களின் விருப்பப்படி இவ் அரசமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் அதிக அதிகாரப் பரவலாக்கலுடன் ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு காண முயல்கிறோம். எங்கள் மக்கள் வடக்கு கிழக்கில் மதச்சார்பற்ற சமஷ்டி முறை யிலான தீர்வுக்கு வாக்கை வழங்கியுள்ளார்கள்.
ஓர் இணக்கமான தீர்வை எட்டுவதற்காகவே நாம் முயற்சிக்கிறோம். ஆனால் எமது மக்கள் தாம் வழங்கிய வாக்கை நாம் மீறிவிட்டோமென எம்மைக் குற்றம் சுமத்துவதாக தெரிவித்துள்ளார்.