Breaking News

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையிலான வழக்கு விசாரணை - ஜனவரியில் ஆரம்பம் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 3,4.8.9. ஆகிய தினங்களில் இடம் பெறவுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின்பேரில் கைது செய்ய ப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திர காந்தன் உள்ளிட்ட 6 பேரின் வழக்கு விசாரணை பலத்த பாதுகாப்பின் மத்தி யில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த இருதினங்கள் நடைபெற்று ள்ளன. 

குறித்த நபர்களுக்கு எதிராக அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ப்பட்டதையடுத்து நேற்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸ்டீன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. 

இதன்போது முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியும் திருகோணமலை மாவட்ட நீதிபதியுமான அப்துல்லா, மேல் நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு அறை யில் சாட்சி பெறப்பட்டதையடுத்து இன்றைய தினம் தொடர் விசாரணைக்கு தவணை அளிக்கப்பட்டுள்ளது. 

 அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் காலை 10.30 மணிக்கு, விசாரணைகள் ஆரம்பமாகி, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றின் இரு தட்டச்சு உத்தியோக த்தர்களிடம் திறந்த நீதிமன்றில் சாட்சியளித்தனர். 

இந் நிலையில் குறித்த விசாரணைகள் பிற்கல் 3.45 மணிவரை நீடித்ததோடு மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் ஜனவரி 3,4,8,9 திகதிகளுக்கு தவணை வழங்கப்பட்டுள்ளது.