Breaking News

இலங்கையர்கள் உட்பட 764 அகதிகள் இத்தாலியில் மீட்பு !

இத்தாலியக் கடலோரக் காவல் படையினரால் மெடிற்றரேனியன் கடலில் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 764 அகதிகளுடன் படகு ஒன்று மீட்க ப்பட்டுள்ளதுடன் 23 பேரின் சடலங்களும் காணப்பட்டன. 
மத்திய மெடிற்றரேனியன் கடலில் நேற்று முன்தினம் இவ் மீட்புப்பணி இடம்பெற்றுள்ளன. ஆறு மீட்பு நடவ டிக்கைகள் நடைபெற்றதாகவும் இத்  தாலியை நோக்கிச் சென்று கொண்டி ருந்த 764 குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டு, டிசியோற்றி என்ற கப்பலின் மூலம், தென்பகுதித் துறைமுகமான ரெக்கியோ கலாப்ரியாவுக்கு எடுத்துச் செல்லப்ப டுவதாக இத்தாலிய கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

 படகில் இருந்து மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் இலங்கை, சிரியா, ஜோர்தான். ஏமன், மொராக்கோ, நேபாளம், அல்ஜீரியா, எகிப்து, பங்களாதேஷ லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.