கோப்பாயில் சுடர் ஏற்றிய சிவாஜிலிங்கம், அனந்தி ஆகியோருக்கு அச்சுறுத்தல் படையினர்!
யாழ். கோப்பாய் துயிலும் இல்ல பிரதான வீதியில் சுடரேற்றி மாவீரர்கள் நினைவு கூரப்பட்டார்கள். இந்த நினைவேந்தல் நிகழ்வு வடக்கமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நேற்று காலை நடை பெற்றுள்ளது.
வீதியில் ஈகைச் சுடரேற்றி இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு வணக்கம் செலு த்தப்பட்டது. நினைவேந்தலின்போது வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் பொது மக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இரணுவத்தினர் பேரு ந்தை வீதிக்கக் குறுக்கே நிறுத்தி போக்குவரத்தை தடைசெய்யும் வகையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படு கிறது. 40 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அவர்களை ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றதும் இராணுவத்தினர் ஈகைச் சுடரினை தண்ணீர் ஊற்றி அணைத்ததோடு சுடர் ஏற்றிய தீச்சட்டியையும் வீசி எறிந்துள்ளனர்.