அரச கூட்டாளிகளுடன் இணைகிறாரா வடக்கின் முன்னாள் அமைச்சர்?
இன உரிமையைக் கைவிட்டு தனிநபர் நலன்களைப்பெற அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள தமிழ்க் கட்சி ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஒருவர் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச ஆட்சிக்காலத்தில் தன்னுடன் ஒத்துழைக்க மறுத்த கட்சிகளிலிரு ந்து உறுப்பினர்களை பண ஆசை காட்டி அல்லது அவர்களது தனிப்ப ட்ட பலவீனங்களை அடையாளம் கண்டு மிரட்டி தன்னுடன் இணை க்கும் எதேச்சாதிகார அரசியலைச் செயற்படுத்தியுள்ளார். அதேபோன்ற நடவடிக்கையை இன்று வடகிழக்கில் செயற்படுத்தி வருகிறது அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளில் ஈபிஆர்எல்எல் எவ் கட்சியானது தமிழரசுக் கட்சியின் சரணாகதி அரசியலை ஆரம்பத்தி லிருந்தே எதிர்த்த ள்ளது.
இதனால் ஆத்திரமுற்ற தமிழரசுக் கட்சியின் மாவை சுமத்திரன் கூட்டு ஈபிஆர்எல்எவ் கட்சியைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் செயற்ப டத்தொடங்கியுள்ளது.
கூட்டணித் தர்த்தைமீறி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஈபிஆர்எல்எவ் கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவமோகனை தனது கட்சியில் இணைத்தது.
அத்துடன் முதலமைச்சருக்கு ஆதரவாக டெலோ கட்சி செயற்படுவதால் சினம்கொண்ட தமிழரசுக் கட்சி ரெலோ சார்பில் மாகாண சபையில் போட்டி யிட்டு வெற்றிபெற்று அமைச்சராக இருந்த டெனீஷ்வரனை தனது கட்சியில் இணைத்தது.
சில மாதங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சியால் முதலமைச்சர் விக்கினேஸ்வ ரனை பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இச்சதித்திட்டத்துக்கு எதிராக இருந்த ஈபிஆர்எல்எவ்வைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவரான ரவிகரன் அவர்கள் பொதுமக்களின் பண த்தைக் கையாடினார் என்று தனது ஊடகங்கள் மூலம் செய்திகளை பரப்பியது தமிழரசுக் கட்சி.
ஆனால் அந்தக்குற்றச்சாட்டைச் சுமத்திய தமிழரசுக் கட்சி ரவிகரனை இரு தினங்களுக்கு முன்னர் தனது கட்சியில் இணைத்துக்கொண்டது.
தமிழரசுக் கட்சியின் இந்த ஆள்பிடிப்பு வேலைகளின் தொடர்ச்சியாக ஈபிஆர்எல்எவ் இலிருந்து இன்னும் சில மாகாண சபை உறுப்பினர்கள் தங்கள் கட்சியில் இணைவார்கள் என தமிழரசுக் கட்சியின் இயக்குனர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
அமைச்சராக இருந்தபோத தங்களது கட்சியுடன் ஒத்துழைக்கமறுத்த காரண த்தால் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய தமிழரசுக் கட்சியானது பொ.ஐங்கரநேசனை தமிழரசுக் கட்சியுடன் இணைப்பதற்காக பேச்சுவார்த்தை கள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமந்திரனின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பி னர் சிறிதரன் அவர்கள் இதற்காக களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
இத் தகவல்களில் உள்ள உண்மைத்தன்மை பற்றி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசனை தொடர்புகொண்டு கேட்டபோது, இவை உண்மைக்குப் புறம்பான தகவல் எனவும் இப்படியான செய்திகளை கசியவிட்டு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுள்ளார்கள்.