Breaking News

அரசியல் கைதிகள் விடயத்தில் தாமதமின்றிச் செயற்படுமாறு- சம்பந்தன் நிபந்தனை!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில்  முன்னாள் நீதியமைச்சர் அக்கறை இல்லை. அதனாலேயே பிரச்சினைகள் நீடித்துள்ளன. 

இவ்விடயத்தில் தற்போதை நீதிய மைச்சர் தலதா அத்துகோரள தாமத மின்றி கவனமெடுத்து விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென எதி ர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற, வரவு செலவுத் திட்டத்தில் நீதியமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் பல வருட காலமாக தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் எவ்வித செயற்பா டும்  எடுக்கப்படவில்லை. 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, மாற்றுச் சட்டமொன்றைக் கொண்டு வருவதாக சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதி லும், அந்நடவடிக்கை தாமதமாகியுள்ளதை நிரூபித்துள்ளார்.
  
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீட்டுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சர், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து, அரசியல் கைதிகள் விடயத்தில் தாமதமின்றி செயற்பட வேண்டுமென நீதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். 

இதேவேளை, பிரிக்கப்படாத நாட்டிற்குள் தீர்வை பெற்றுக்கொள்ள தயாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், பிரி வினைவாதிகள் சிலரே இதனை குழப்ப முனைவதாக சம்பந்தன் குறிப்பி ட்டார். 

இதனை அரசாங்கம் உணர்ந்து செயற்பட வேண்டுமென குறிப்பிட்ட சம்பந்தன், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழ் அரசியல் கைதி கள் அனைவரையும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லையெனவும் தெரிவித்துள்ளார்.