யாழ்ப்பாணத்தில் புலிகள் மீள உருவாகவில்லையென - பொலிஸார் மறுப்பு
20 வயதுக்குட்டபட்ட இளைஞர்களுக்கு இடையே சிறு சிறு மோதல்களே இங்கு இடம்பெறுகின்றன. அவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னா ண்டோ தெரிவித்தார்.
அதேவேளை, நாடாளுமன்றில் தெரி விக்கப்படுவது போன்று யாழ்ப்பாண த்தில் புலிகள் மீள உருவாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பா ணத்தில் நேற்று மாலை செய்தியாள ர்களை சந்தித்தபோதே அவர் இத னைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மீளவும் விடுதலை ப் புலிகள் உருவாகி விட்டனர் என நாடாளுமன்றில் சிலர் பேசுகின்றனர். அவ்வாறு ஒரு நிலைமை யாழ்ப்பாணத்தில் இல்லை.
20 வயது இளைஞர்கள் நாலைந்து பேர் மோதிக்கொள்கின்றனர். அவர்களில் பலர் சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெளியில் உள்ளவர்களில் சிலர் இரு தரப்பாக தங்களுக்கு இடையே மோதிக்கொள்கின்றனர்.
அவர்களின் நோக்கம் சிறைகளிலுள்ளவர்களின் மனநிலை மாறக்கூடாது என்பதே யாகும் என்றும் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாகத் தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தே கிக்கப்படும் 11 பேர் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
பொலிஸார் தற்போது எவரை யும் அநாவசியமாகக் கைது செய்வதில்லை. சந்தேகம் ஏற்பட்டால் அந்த நபரை அழைத்து விசாரிப்போம்.
அவர் மீதான சந்தேகம் நிரூபிக்கக்கூடியதாக இருக்குமாயின் அந்த நபரைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துவோம். இல்லையேல் அவரை விடு விப்போம்.
அதேபோன்று 11 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தி னம் அழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணைகள் இடம் பெறுகின்றன என்றும் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.