முன்னைய ஆட்சியின் பாவத்தைச் சுமப்பதாக - ரணில்!
முன்னைய ஆட்சியின் போது திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் செய்த பாவத்தையே நாம் போக்கி வருகின்றோம்.
முன்பு திறைசேரிக்கு கீழேயே பாராளுமன்றம் கொண்டு வரப்பட்டது. எனி னும் அதனை மாற்றியமைத்து திறைசேரியையும் மத்திய வங்கியையும் பாராளுமன்றத்துக்கு கீழ் கொண்டு வந்துள்ளோம்.
இதன்படி முன்னைய ஆட்சியின் போது திறைசேரி உள்ளிட்ட நிறுவனங்களில் ஊழல் புரிந்த அதிகாரிகள் பலரை நீக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேர த்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் கேள்வியின் போது குறுக்கிட்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
முன்னைய ஆட்சியின் போது திறைசேரிக்குக் கீழேயே பாராளுமன்றம் கொண்டு வரப்பட்டது. எனினும் அதனை மாற்றியமைத்து திறைசேரியையும் மத்திய வங்கியையும் பாராளுமன்றத்துக்குக் கீழ் கொண்டு வந்துள்ளோம்.
முன்னைய ஆட்சியின் போது திறைசேரி செயலாளர் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் செய்த பாவத்தையே நாம் போக்கி வருகின்றோம். இதன்படி திறைசேரி , மத்திய வங்கி,வரவுசெலவுத்திட்ட அலுவலகம் ஆகியவற்றை பாராளுமன்றத்துக்குக் கீழ் கொண்டு வந்து சீரான நிதி முகாமைத்துவத்தை ஏற்படுத்தி எமது காலத்திலேயே முழுக் கடனையும் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன் தற்போது பாராளுமன்ற கோப் குழு உட்பட ஏனைய குழுக்களுக்கு எதிர்க்கட்சியினரையே நாம் தலைமைப் பதவிக்கு அமர்த்தியுள்ளோம். எனி னும் முன்னைய ஆட்சியின் போது எந்தக் குழுவினையும் எதிர்க்கட்சி வழங்க வில்லை.
அத்துடன் திறைசேரி உட்பட நிறுவனங்களில் முன்னைய ஆட்சியின் போது ஊழல் புரிந்த அதிகாரிகள் பலரை நீக்கவுள்ளோம்.