குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமாம் - மஹிந்த !
குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள செயற்குழு பிர தானி காமினி செனரத்தை நேற்றைய தினம் சந்தித்த பின்பு ஊடகவியலா ளர்களிடம் உரையாடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற் குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தனை காலமும் மத்திய வங்கி நிதி மோசடி தொடர்பில் ஒன்றி ணைந்த எதிர்க்கட்சியினரின் தொலைபேசி மூலமான தொடர்புகள் மட்டுமே கண்காணிக்கப்பட்டுள்ளன.
தற்போது அரசாங்கத்தை சார்ந்தவர்களின் தொலைபேசி அழைப்புக்களும் கண்காணிக்கப்படுகின்றன.
எனவே குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.