ஐ.நா.ம அரசியல் கைதிகளின் விடுதலையில் தலையிட வேண்டும் – யாழ்.பல். மாணவர்கள் மகஜர் !
சிறைகளில் நீண்ட காலமாக தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடு தலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவை தலையிட வேண்டுமெனக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐ.நா.மனித வுரிமை பேரவையின் ஆணையாளருக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் நடவடிக்கை எடுக்காமல் இலங்கை அரசு மௌனமாக இருந்து வரும் நிலையிலே சர்வதேசத்திடம் இக் கோரிக்கையை முன் வைத்துள்ள தாக மாணவர் ஒன்றியம் தெரிவித்து ள்ளது.
அனைத்து அரசியல் கைதி ளையும் விடுதலை செய்யக் கோரி யாழில் நேற்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை யாழ்.பல் கலைக்க ழக மாணவர் ஒன் றியம் முன்னெடுத்திருந்தது.
இந்த பேரணி கைலாசபிள் ளையார் கோவிலுக்கு அரு காமையில் அமைந்து ள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு சென்று மனிதவுரிமை ஆணையாளருக்கான மகஜர் ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது,
இலங்கை அரசின் சிறைக ளில் வாடும் தமிழ் அரசியற் கைதி களின் விடுதலையைக் கோரி யாழ்ப்பாணத்தில் மாணவர் போரா ட்டத்தை ஒட்டிய விரிவான மகஜர் ஒன்றை ஜெனீவா வைத் தலைமை யகமாகக் கொண்டியங்கும் மனித உரிமை உயர்ஸ்தானிக ரான இளவர சர் செயிட் அல் ஹூசைன் மனித உரிமைப் பேரவையின் 11 ஆம் சுற் றுக்கான அதிபரான ஜோக் குயின் அலெக்சாண்டருக்கும்,
ஜெனீவாவில் இயங்கும் அமெரிக்க அரசின் ஐ.நா. மனித உரிமைப் பொறி முறைக்கான நிரந்தரப் பிரதிநிதியான தியோடோர் அலெக்ராவுக்கும் யாழ்ப் பாண வதிவிடக் காரியால யங்களூடாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூ கம் இந்த மகஜரை கையளித்துள்ளது.
தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பதற்காக ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைப் பேரவைக்கும், மனித உரிமை உயர் ஸ்தா னிகரின் அலுவலகத்திற்கும் இலங்கை அரசோடு 2015 இல் ஒத்திசைவுத் தீர்மா னத்தைக் கொண் டுவந்து பின்னர் இந்த வருடம் மேலும் இரண்டு வருட நீடி ப்பைக் கொண்டுவந்த அமெரிக்காவின் ஐ.நாவுக் கான ஜெனீவாத் தூதுவரு க்கும் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தில் சர்வ தேச பொறுப்புள்ளது.
இந்தப் பொறுப்பு சர்வதேசச் சட்டவிதிகளில் தமி ழர்களுக்கு உள்ள உரிமை யின் பாற்பட்டது. தவிரவும், அமெரிக்க அரசு தனது மனித உரிமைப் பொறி முறை ஊடான நேரடித் தலையீடு மூலமாக மனித உரிமைப் பேரவையில் இலங்கை அர சோடு ஒத்திசைவு நிகழ்ச்சி நிரல் ஒன்றின் மூலம் உள் நாட்டுப் பொறிமுறையிடமே நீதிவழங்கலை ஏறத்தாழ முழுமையாகக் கையளித்து விட்டுள்ள ஒரு நிலை காணப்படுகின்றது.
மேலதிகமாக இரண்டுவருட கால நீடிப்பை வழங்கும் கைங் கரியத்தையும் அமெரிக்க அரசின் மனிதவுரிமைப் பொறிமுறையே செய்திருக் கிறது. எனவே, ஜெனீவாவைத் மையமாக கொண்டியங்கும் இவ்விரண்டு தரப்பினருக்கும் அவரவருக்குரிய பொறுப்பை நினைவுபடுத்தி, சர்வதேசச் சட்ட நியமங்களின் அடிப்படையில் தமிழ் அரசியற் கைதிகளுக்குரிய உரிமைகளையும் நினைவு படுத்த வேண் டிய தேவை எழுந்துள்ளது.
குறிப்பாக, இலங்கை அரசு தமிழ் அரசியற் கைதி களின் வேண்டுகோள்க ளைத் தனது சட்டத்தையும் சட்டப்பொறிமுறைகளையும் கோடிகாட்டிப் புறக்கணி க்கும் நிலையில் தமிழர்களின் தரப்பு சர்வதேசச் சட்டப் பொறிமுறைகளு க்குள் தமிழ் அரசியற் கைதிகளுக்கு உள்ள உரிமையைத் தட்டிக்கேட்காத நிலை மிகவும் பரிதாப நிலையாகும்.
எனவே, தமிழ் அரசியற் கைதிகளுக்குள்ள சர்வதேசச் சட்ட நியமங்க ளின் அடி ப்படையிலான உச்ச பட்ச உரிமைகள் எவை என்பதைக் குறித்த சர்வதே தர ப்பினருக்கு நினைவுபடுத்தவேண்டிய சூழல் எழுந்துள்ளது.
இதன் மூலம் இலங்கை அரசின் மீது உடனடியாக அழுத்த த்தைப் பிரயோகி க்குமாறும், தவறும் பட்சத்தில் சர்வதேச தரப்பினருக்கும் தமிழ் அர சியற்கைதி கள் மீது இழைக்கப்படும் துன்பியலுக்கு மனிதாபிமானப் பொறுப்பு இருக்கிற தென்பதையும் மாணவர் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுச் சிறையில் வாடும் தமிழ்க் கைதிகள் அனைவரும் சர்வதேச சட்ட நியமங்க ளின் பிரகாரம் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் என்பதையும் அவர்கள் அனை வரும் குறைந்தபட்சம் அரசியற் கைதிகளாக இலங்கை அரசால் அங்கீக ரிக்கப்பட்டு அரசியல் முடிவொன்றின் மூலம் விடுதலை செய்யப்படவேண் டியவர்கள் என்பதையும் நான்கு அடிப்படைகளை மையமாக வைத்து மாண வர் சமூகத்தின் மகஜர் எடுத் துக்கூறுகிறது.
சர்வதேச மட்டத்தில் தமிழர் தரப்பாக பேச்சுவார்த்தைகளிலும் போர்நிறுத்த உடன்படிக்கை யிலும் அங்கீகரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் போரில் முழுமையாக அழிக் கப்பட்டிருப்பதால், தமிழ் அரசியற் கைதிகளின் உறவு களும் தமிழ்ச் சமூகமும் மாத்திரமே கைதிகளின் நலன் குறித்துப் பேசவேண் டிய சூழல் நிலவுகிறது.
குறிப்பாக சர்வதேச சட்டத்தில் தமிழர் தரப்புக் கைதிகளுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் என்ன என்பதை முதலாவதாகவும், ஐ.நா. இலங்கை யில் இழைத்ததாகத்தானே ஒத்துக்கொண்ட தவறுகள் மூலம் ஐ.நாவுக்கு இரு க்கும் பொறுப்பை இரண் டாவதாகவும்,
பேச்சுவார்த்தைக் காலத்தில் இணைத் தலைமை நாடுகளில் ஒன்றாகவும், போரின் பின்னர் ஜெனீவாவில் தொடர் தீர்மானங்களைக் கொண்டு வந்ததன் மூலமும் அமெரிக் காவின் மனித உரிமைத் தரப்புக்கு தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் முக்கிய பொறுப்பு இருக்கிறது என்பதை மூன்றாவதாகவும்,
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள்ளாக் கப்பட்டுள்ள கைதிக ளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்ற உரிமைகளை மாத்திரம் வைத்து அணுகி னாற்கூட அவர்கள் அரசியற் கைதிகள் என்ற தீர்ப்புக்கு வரமுடியும் என்பதை நான்காவது காரணியாகவும் பல்கலைக்கழக மாணவர்களின் மகஜர் எடு த்துக்காட்டியுள்ளது.
குறிப்பாக, ஜெனிவாக் கோட்பாடுகளின் மேலதிக நெறிமுறை ஒன்றின் பிரகா ரம், இலங்கையில் நடைபெற் றது ஒரு சர்வதேசத்தன்மையுடைய, சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட, வேற்று இன ஆக்கிரமிப்பு என்று கருதப்படக்கூடிய சூழலில் இடம்பெற்ற போர் என்பதை மாணவ சமூகத்தின் மகஜர் சர்வதேசச் சட்ட நியமங்களின் பிரகாரம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஆக, சர்வதே சத் தன்மையுடனான போர் ஒன்று முடிவுக்கு வரும் போது போர்க்கைதிகள் மீளத் தத் தம் குடும்பங்களோடு ஒன்றிணைய வேண்டும் என்பதும் அவர்கள் குற்றவியற் சட்டங்களுக்கு ஆட்படுத்தப்படலாகாது என்ப தும் சர்வதேச சட்டம் வழங்கும் உரிமை.
ஆனால், இலங்கை அரசோ தமிழ் அரசியற் கைதிகளின் தண்டனை வழங்க ப்பட்டவர்களைப் போர்க்கைதிக ளாகப் பார்க்கத் தயாராக இல்லை. எனவே, அவர்கள் தமது தண்டனைக்காலத்தை சிறைகளில் கழித்தேயாக வேண்டிய நிலை.
இது அநீ தியான செயல் என்பதைச் சர்வதேச சட்டங்களில் தமிழர் தரப்புக்கு இருக்கும் பிடி மானத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம் மாணவர் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொட ர்புபட்டவர்களாகச் சித்திரித்து போலியான குற்றப்பத் திரிகைகள் மூலம் தடுப்பில் வைக்கப்பட்டி ருப்பவர்கள் அனைவரும் அரசியற் கைதிகள் என்ற அந்தஸ்துக்கு உரித்தா னவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் மாணவர்களின் மகஜர் ஐ.நா வும் அமெரிக்காவும் பயங்க ரவாதத் தடைச்சட்டத்திற்கு உள்ளாக்கப்பட்ட கைதிக ளாக உள்ள அனைவரையும் அரசியற்கைதிகளாக அங்கீகரிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அவ்வாறு ஐ.நாவும் அமெரிக்காவும் பொறுப்போடு அங்கீகரித்தாலே இலங்கை அரசுக்கும் முறையாக விண் ணப்பத்தை அவர்களால் மேற்கொள்ளமுடியும் என்ப தையும் யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் தமது மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, சுனாமி அனர்த்தத்தின் பின்னர் தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசு க்கும் பொதுக்கட்டமைப்பு தொடர்பான சர்வதேச பேச்சு க்கள் மூலம் உடன்பாடு ஒன்று காணப்பட்டது.
இந்த உடன்பாட்டை வரவேற்ற அமெரிக்க அரசு, எதிர்பா ராத விதமாக இந்தக் கட்ட மைப்புக்குத் தான் பங்களிக்க முடியாதென்பதையும் அதற்குச் சட்ட ரீதியான சிக் கல்கள் இருப்பதாகவும் ஒரு நிலைப்பாட்டை அறிவித்தது.
இந்த நிலைப்பாடு வெளி யாகிய ஒரு சில நாட்களிலே தீவிரவாதத் தரப்புகள் இல ங்கையின் உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்து குறித்த சுனாமி உடன் படிக்கையைச் சட்ட ரீதியாக இரத்துச் செய்தார்கள்.
இது மிகவும் கவலைக்குரிய ஒரு முன்நிகழ்வு என்றும், இதைப்போன்ற நிலையைத் தமிழர்களுக்கு மீண்டும் ஏற்படுத்தவேண்டாம் என் றும் அமெரிக்க மனித உரிமைப் பொறிமுறையினரிடம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூ கம் சுட்டிக் காட்டியுள்ளது.
தமிழ் அரசியற் கைதி கள், அரசியற் கைதிகளாகச் சர்வதேச தரப்புகளால் அங் கீகரிக்கப்படுவது அவசியம் என்பதையும், சர்வதேசப் பொறிமுறைகளுக்கும் தலையீடு செய்துள்ள சக்திகளுக்கும் இது விடயத்தில் பொறுப்பு இருக்கிற தென்பதையும் குறித்த மகஜர் நிரூபித்து நிற்கின்றது.