Breaking News

தமிழர்களுக்கான நீதியில் அரசு துரோகம் சிவமோகன் எம்.பி. ஆதங்கம் !

சிறுபான்மை மக்களின் முழுமையான  பங்களிப்புடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் கூட்டமைப்பின் நல்லாட்சி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தினையே முன்னெடுத்துள்ளார். 

முன்னாள் ஆட்சியாளர், இனப்படு கொலையாளர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்குச் செய்த குற்றங்க ளுக்கு உரிய தண்டனையை புதிய நல்லாட்சி வழங்குமென  தமிழ் மக்க ளால் எதிர்பார்க்கப்பட்டபோதும் அக் குற்றவாளிகளுக்கான எந்தவித விசாரணைகளும் நடத்தப்படாமல், தண்டனைகளும் வழங்கப்படாமல் இந்த நல்லாட்சி அரசிலே அவர்கள் மிக வும் பாதுகாப்பாக, சுதந்திரமாகப் பதவிகளைப்பெற்று, சொகுசு வாழ்க்கை யினை வாழந்துகொண்டிருப்பதை காணமுடிவதாக வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். 

வழமைபோல சிங்கள ஆட்சியாளர்கள் செயற்படும் விதமாக மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்திட்டத்தையே முன்னெடுத்து ள்ளார். 

இவ்விடயம் அரசு தனது நிகழ்ச்சி நிரலை இன்னும் மாற்றவில்லை அத்துடன் தமிழ் மக்களுக்கானத் தீர்வு விடயத்தில் நன்கு திட்டமிட்டே செயற்படுவது புலனாகின்றது. 

இன்றுரை தமிழர் படுகொலைகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உரியவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படவில்லை என்பது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தைத் தோற்றுவித்துள்ளது. 

சிங்களப்பேரினவாத அரசு சர்வதேச விசாரணையை நடைமுறைப்படுத்த முடி யாதெனவும் உள்ளக விசாரணையை நடாத்தும் செயற்பாட்டில் தொடர்ந்தும் செயற்படுகின்றனர். 

சர்வதேச நாடுகளையும் ஏமாற்றும் நாடகத்தை கச்சிதமாக நல்லாட்சியும் செய்து வருவதுடன், தமிழர் தரப்பிற்குள் சூழ்ச்சிகளைச் செய்து திட்டமிட்டு ஒற்றுமையைக் குழப்பும் நடவடிக்கைகளையும் மறைமுகமாக மேற்கொள்கி றது. 

ஆகவே தமிழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் அணி திரள்வதுடன் பகைமைகளை மறந்து தமிழர் நலனுக்காக அனைத்துத் தமிழ்ப் பிரதிநிதிகளும் ஒன்று திரண்டு ஒத்துழைப்பதே எனது ஆதங்கமெனவும் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.