Breaking News

கஜேந்திரகுமாருடன் கூட்டிணைவா? – மனம் திறந்த சுரேஷ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகள் சரியாகத்தான் இருக்கின்றன ஆனால் அதன் தலைமைப் பொறுப்பிலிருக்கும் நபர்கள் கூட்டமைப்பைத் தவறான திசையில் அழைத்துச் செல்கிறார்கள் என ஈபிஆர் எல் எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசியலில் ஈபி.ஆர் எல்.எப் தமிழரசுக்கட்சியுடன் இணை ந்து செயற்படாதென  அறிவிப்பு வெளி யாகியுள்ள நிலையில், குறித்த அறி விப்பினை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரனை  தொடர்பு கொண்ட போது அது தொட ர்பிலும் சமகால அரசியல் நிலைமை கள் தொடர்பிலும் அவர் தெரிவித்த கருத்துக்களில் .....
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தோற்றம் பெற்றபோது ஈபிஆர்எல்எவ் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என சுமந்திரன் தெரிவித்த கருத்தானது அறியாமையால் தெரிவித்த கருத்தாகப் பார்க்க முடியாது என்றும் வரலா ற்றை மாற்றப்பார்க்கும் சுமந்திரனின் ‘தந்திரம்’ என்றார்.

புதிய அரசியல் யாப்பிற்கு இணங்கி தமிழினத்திற்கு கேடு செய்யத் துடிக்கும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் இனிப் போட்டியிடப்போவதில்லை என்ற முடிவில் தான் திடமாக இருப்பதாகத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்தின், செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தற்போது கிடைக்கும் அரச சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்பதாலும், சித்தாத்தன் அவர்கள் தனது தந்தை யின் செல்வாக்கு மட்டுமல்லாமல் வீட்டுச் சின்னமும் தனது தேர்தல் வெற்றி க்கு காரணம் என்று கருதுவதாலும் தமிழரசுக் கட்சியுடன் இணக்கத்தைத் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியுடன் இணக்கம் இல்லையென்றால் இனிவரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவீர்களா என தொடுக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த சுரேஸ், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமையை விரு ம்புகிறார்கள் ஒற்றுமைக்காகத்தான் கடந்த தேர்தலிலும் மக்கள் கூட்டமைப்பு க்கு வாக்களித்தார்கள்.

மக்களின் விருப்பை மதித்து ஒத்தகருத்துள்ள சக்திகளை ஒன்றுதிரட்ட முனை கிறேன். கஜேந்திரகுமார் அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் அவருட னும் கலந்தாலோசிக்க இருக்கிறேன் என்றார்.

அத்துடன் கூட்டு முயற்சி பலனளிக்காவிடில் தமது கட்சி தனித்துப் போட்டி யிடும் என்றார். கடந்த கால ‘கறைகளை’ மக்கள் மத்தியில் மறக்கச் செய்வத ற்காகத்தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தனிக் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிறார் என தமிழரசுக் கட்சி மற்றும் இலங்கைத் தமிழ்க் காங்கி ரஸினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாகப் பதிலளித்த பிரேமச்சந்தி ரன் அவர்கள் தங்களின் தவறுகளை மக்களிடமிருந்து மறைக்க வேண்டிய தேவை தங்களுக்கு இல்லையெனத் தெரிவித்துள்ளார்.

ஈபிஆர்எல்எவ் வலியுறுத்துவது தனிக்கட்சி அல்ல என்றும் கட்சிகளின் கூட்டமைப்பைத்தான் என்றார். இன்னொரு கேள்விக்குப் பதிலளித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தனித்துப் பயணிப்பதால் வெற்றிபெற முடியாது என்பதை கஜேந்திரகுமார் அவர்கள் உணர்ந்திருப்பார் என்றும் அத்துடன் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜி.ஜி பொன்னம்பலத்தின் சைக்கிள் சின்னமும் அவர்களுக்கு பலவீனம் என்றார்.

கொள்கை அடிப்படையில் அனைவரும் இணைந்து பயணிக்கவேண்டிய முக்கி யமாக காலகட்டத்தில் கொள்கைப் பிடிப்புள்ள அனைவரையும் அரவணைத்து முன்னோக்கிச் செல்வதற்கு எவரும் தடைக்கல்லாக அமையக்கூடாதெனத் தெரிவித்து  பகிர்வை முடித்தார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.