இனம் வாழ உயிரீந்த உத்தமர்களைப் போற்றும் மாவீரர் நாள் இன்று!
இனத்தின் விடியலுக்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரச் செல்வ ங்களை மனமுருகி வணங்கும் புனித நாளான மாவீரர் நாள் இன்று தமிழ் மக்களால் உலகெங்கும் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வரு கிறது.
ஈழவிடுதலைக்காக நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரச் செல்வங்கள் தங்கள் உயி ர்களை கொடைகளாக்கி அர்ப்பணித்த புனித மான நாள் இன்றாகும்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவிடங்கள், நினைவுத்தூபிகள் அனைத்தும் இனவாதிக ளால் இடித்து அழிக்கப்பட்ட போதிலும் துளிய ளவும் மாவீரர்கள் குறித்த நினைவுகளை மக்களின் மனங்களில் இருந்து அவர்களால் அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
அரசியல் நலனுக்காக சில துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்று வதற்கு படைத்தரப்பு அனுமதித்துள்ள போதிலும் அனுமதிக்காது ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற துயிலும் இல்லங்களிலும் வணக்கம் செலுத்துவதற்கான முனைப்புக்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முழுமையான கண்காணிப்பு நடவடிக்கைளை படைத்தரப்பு மேற்கொள்வதன் மூலம் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டே வரு கின்றன.
தாய் நாட்டின் விடுதலைக்காக எண்ணிப் பார்க்க முடியாத, வரலாற்றில் கேட்டறிந்திடாத பல்லாயிரம் தியாகங்களை எங்கள் மாவீரச் செல்வங்கள் நிக ழ்த்திச் சென்றிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மக்கள் மனங்களிலும் கோபுரமாய் உயர்ந்து வாழும் எங்கள் மாவீரச் செல்வங்களை நினைந்துருகி வணங்கி நிற்போம்.
அவர்கள் விட்டுச் சென்ற கனவுகளின் எண்ணங்கள் நனவாக உழைப்பதே நாங்கள் அவர்களு க்குச் செய்யும் கைமாறாகும்.