இலங்கை கடற்படையை முடக்க வேண்டுமென இந்திய மத்திய அமைச்சர் நிபந்தனை !
தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண, இலங்கை கடற்படையை முடக்க வேண்டுமென, மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் நிப ந்தனை.
தூத்துக்குடி விமான நிலையத்தில் (ஞாயிற்றுக்கிழமை) அன்று செய்தி யாளர்களைச் சந்தித்த வேளை மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார். இல ங்கை இந்திய கடற்பரப்பில், அத்து மீறி பிரவேசித்தாக 8 இந்திய மீன வர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாயின், இப் பிரச்சினை குறி த்து பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்.
அத்துடன் வெளியுற வுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ்யும், இது தன் வீட்டு பிரச்சினை என்பதை மனதில் வைத்து, தீர்வு காண ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவை சரிவர இடம்பெறுமாயின், இப் பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும். அதுவரைக்கும் இலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.