பல்கலை. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு நல்குவது தார்மீக கடமையாகும் – அனந்தி
சமூதாய நோக்கில் போராட்டத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் யாழ். பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவளிப்பது பல்கலைக் கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவரது தார்மீக ஒத்துழைப்புக்களில் ஒன்றாகும்.
மாணவர்கள் முன்னெடுத்துள்ள இப்போராட்டமானது பல்கலைக் கழக நிர்வா கத்திற்கு எதிரான போராட்டம் அல்ல என்பதையும் தாம் சார்ந்த சமூகத்தின் மீதான அக்கறையில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றதெ ன்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் புரி ந்திட வேண்டுமென வடக்கு மாகாண சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் திரு மதி அனந்தி சசிதரன் வேண்டுதல் விடுத்துள்ளார்.
வகுப்புக்களைப் பின்தள்ளி விட்டு அமைதியான செயற்பாட்டில் போரா ட்டத்தை முன்னெடுத்து வரும் மாண வர்களை பல்கலைக் கழகத்திற்கு பூட்டுப் போட்டு முடக்கும் நிலைக்கு தள்ளியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைவிரிப்பு குறிப்பிட த்தக்கது.
அமைதியான வழியில் போராடிய மாணவர்களை பிரச்சினைக்கு பேசித்தீர்வு காணலாம் என்று கூறி அழைத்துப் பேசிய ஜனாதிபதி மாணவர்களிடத்தே வழங்கியிருந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டமையே மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த வழிசமைத்துள்ளது.
சந்திப்பு முடித்து நீங்கள் யாழ்ப்பாணம் செல்வதற்குள்ளே தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லதொரு தீர்வை முன்வைப்பதாக பேச்சு மேசையில் வைத்து
ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதியானது நிறைவேற்ற ப்படாது ஒருசில நாள் கழித்து கடந்த புதன்வரை அவகாசம் கோரப்பட்டி ருந்தது.
புதனும் வந்தது
வாக்குறுதி வெள்ளிக்கிழ மைக்கு தள்ளிப்போனது.
சில மணித்தியா லங்களில் ஆரம்பித்து புதன் என்றும் பின் வெள்ளி என்றும் கால அவகாசம் நீடிக்க ப்பட்டது. இதுவரை வகுப்பு புறக்கணி ப்புடன் வரையறுத்து
நம்பிக்கையுடன் பொறுமை காத்திருந்தே இருந்தார்கள். இந்நிலையிலே அரசியல் கைதிகள் விடயத்தில் தம்மால் எதுவும் செய்ய முடியாதென்று அரசு
தரப்பின் சார்பில் அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் மாணவர் தரப்பிடம் வெள்ளிக்கிழமை அன்று கைவிரித்துள்ளார்.
அதன் பின்னரே வேறு வழியின்றி
போராட்டத்தை தீவிரப்படுத்தும் முடி வில் மாணவர்கள் தள்ளப்பட்டார்கள்.
தமிழ் அரசியல் கைதிகள் விடயம் அரசியல் காரணங்களுக்காகவே தீர்வு காணப்படாது இழுத்தடிக்கப்பட்டு நீள்கின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்
கீழான அச்சுறுத்தல் நிலையில் பெற ப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிக்கு புறம்பான முறை யில் வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி பல
ஆண்டுகளாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதானது இலங்கை அரசாங்கத்தின் தமிழர்கள் மீதான அடக்குமுறையின் வெளிப்பாடாகும்.
தமிழர்களை எப்படியேனம் அடக்கியாண்டு வருவதன் மூலம் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளை குதூகலப்படுத்தி தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதென்ற கடந்த கால ஆட்சியாளர்கள் பயணித்துள்ள இன வாதவழியி லேயே நல்லாட்சி அரசு என்று கூறிக்கொள்ளும் தற்போதைய அரசும் பய ணித்து வருவதன் அண்மித்த சாட்சியாகவே தமிழ் அரசியல் கைதிகள் விட யத்தில் அரசின் நிலைப்பாடு உருவாகியுள்ளது.
மயிலே மயிலே இறகு போடு என கேட்டு, தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டுமெனக் காத்திருப்பதில் எதுவித பயனும் இல்லை என்பது வரலாறு
மெய்ப்பித்து நிற்கும் பேருண்மையாகும்.
அதன நன்குணர்ந்தே யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் தமது கற்றல் செய ற்பாட்டினையும் கருத்திலெடுக்காது தீர்வு
நோக்கியதான அழுத்தத்தினை ஏற்ப டுத்தும் நோக்கில் வேறு வழியின்றி சாத்வீகப் போராட்டத்தை உட்வேகப்ப டுத்தியுள்ளார்கள்.
தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக அரசியல் கைதிகள் விடயமும் ஆகிவிடக்கூடாதென்றால் ஒன்றுபட்ட மாபெரும் சக்தியாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியுடன் நின்றால் மட்டுமே தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லதொரு தீர்வினைக்காண முடியும்.
ஆகவே, பல்கலைக்கழக
நிர்வாகம், மாணவர்களது பெற்றோர், பொது அமை ப்புகள், இயக்கங்கள் மற்றும் அரசியல் தரப்பினர் உள்ளிட்ட அனைவரும் பாரப ட்சமின்றி ஒன்றுபட்ட ஆதரவினை, தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவான பல்கலைக் கழக மாணவர்களின் சாத்வீகப் போராட்டத்திற்கு வழங்குவது அனைவரதும் தார்மீகக் கடமையாயென அமைச்சர் அனந்தி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.