தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் இறுதி தீர்விற்காக 22 ஆம் திகதி கூட்டமைப்பு!
உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப் பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இறுதி முடிவை தீர்மானிக்கவுள்ளனர்.
இதற்காகக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி களான தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்கும் ஒன்றுகூடல் கொழும்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னேற் பாடாகப் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சிக்கும் ரெலோவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல். எவ் தீர்மானம் எடுத்துள்ள நிலையில், ஏனைய பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப் பங்கீடு தொடர்பில் கவனம் எடுத்துள்ளனர்.