வடமாகாண மர நடுகை மாதம் - நல்லூர் கிட்டுப் பூங்காவில் ஆரம்பம்!
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு கண்காட்சியொன்று நல்லூர் கிட்டுப் பூங்காவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநே சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பிரதம விரு ந்தினராக கலந்து கண்காட்சியை ஆர ம்பித்து வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வடக்கு விவசாய அமைச்சர் க.சிவனேசன் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் பொது மக்கள் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.