Breaking News

காணாமல் போன உறவுகளின் விடயத்தில் தீர்வை எட்டும் முயற்சி இழுத்தடிப்பு !

தமிழர் தாயகப் பகுதிகளில் காணாமலான உறவுகளின் விடயத்தில் மீளவும் விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளமையால் அந்தத் தீர்வுக்கு நிரந்தரத் தீர்வை எட்டும் முயற்சியில் கால தாமதமாகுவதை அவதானிக்க முடிகின்றது. 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவு க்கும் வடக்கு – கிழக்கில் இருந்து சென்ற காணாமற் போனோரின் உறவு களுக்கும் இடையே கொழும்பில் நடைபெற்ற சந்திப்பு முடிவுகள் எது வும் எட்டப்படாத நிலையில் முடி வடைந்துள்ளது. 

இச் சந்திப்பின்போதே காணாமற் போனவர்கள் தொடர்பில் மீள விசாரணை களை முன்னெடுப்பதற்குத்தான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என ஜனாதிபதி காணாமற் போனோரின் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

அரசின் இரகசியத் தடுப்பு முகாம்கள் எதுவும் தற்போதைய அரசின் கீழ் செயற்படவில்லை. எவருமே அவ்வாறு இரகசியமாத் தடுத்து வைக்கப்பட வில்லை. காணாமற் போனோரின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடு க்கவே நான் எதிர்பார்த்துள்ளேன். 

அத்துடன் காணாமற் போனோரின் உறவுகளது முறைப்பாடுகள் கோரிக்கை கள் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதற்கான புதிய விண்ணப்பப் படிவங்களை மாவட்டச் செயலாளர்களின் ஊடாக வழங்குவதற்கும் இந்த விண்ணப்பப் படி வங்களை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் சேகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே மஹிந்த அரசின் காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டுக் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியங்கள் திரட்டப்பட்டதுடன் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டி ருந்தன. 

இந்நிலையில் மீண்டும் ஒரு விசாரணை நடத்துவது என்பது காலத்தை இழு த்தடிக்கும் செயற்பாடாகவே அமையும். இதன் மூலம் உண்மை வெளிவரப் போவதில்லை என மனித உரிமை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.