கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட காரணம் என்ன? – முதலமைச்சர்
தன்னாட்சி, தாயகம் ரீதியிலான கோரிக்கைகளைக் கைவிடத் தயார்; சமஷ்டி முறைசாத்தியம் இல்லையெனக் கூறிஒரு சிலசலுகைகளை மட்டும் பெறும் வகையில் செயற்படுவதால் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்பட எத்தனிக்கின்றது.
அதாவது நாமாகவே வலிந்து தயா ரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தைதான் தோன்றித்தன மாகக் கைவிட எமது தலைமைகள் முன்வந்த மையேபிளவு ஏற்பட ஏது வாக இருக்கின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரத்துக்கொருகேள்வி என்று வடக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அறிக்கை வழங்கி வருகிறார். இதன்படி இந்தவாரம் அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதமிழ்த் தலைமைத்துவம் தோற்று விட்டோம் என்றமனப்பாங்கில் பௌத்தத்துக்கு முதலிடம் வழங்க நாம் தயார்;
ஒற்றையாட்சியின் கீழ் சிங்களப் பேரினவாதத்துக்கு தொடர்ந்து இடம் கொடு க்க நாம் தயார்;
வடகிழக்கை இணைக்காது விட நாம் தயார்;
தன்னாட்சி,தாயகம் போன்றகோரிக்கைகளைக் கைவிடத் தயார்;
சமஷ்டி முறை சாத்தியம் இல்லையெனக் கூறி ஒருசில சலுகைகளை மட்டும் பெறும் வகையில் நடந்து கொள்வதால் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவுஏற்படப் பார்க்கின்றது.
அதாவது நாமாகவே வலிந்து தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ள டக்கத்தை தான் தோன்றித்தனமாகக் கைவிட எமது தலைமைகள் முன்வந்த மையே பிளவு ஏற்பட ஏதுவாகவுள்ளது.
பெரும்பான்மையானதமிழ்க் கட்சிகள் யாவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டியகருத்தையேதாம் கொண்டுள்ளனர். ஆகவே கொள்கைகளில் மாற்றமேதும் இல்லையென தமிழ்த் தலைமைத்துவத்தால் உறுதியுடனும் நேர்மையுடனும் கூறமுடிந்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் வலுவான ஒரு அரசியல் கட்சியாக முன்னேறமுடியும்.
அவ்வாறில்லாமல் குறைந்ததைப் பெறுவதே உசிதம் என எமது தொடர் அடி ப்படைக் கருத்துக்களை உதாசீனம் செய்தால் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
ஆனால் அவ்வாறான குறைந்த பட்ச தீர்வுகளுக்கு இவ்வளவு தியா கங்களின் பின்னரும் எம்மவர்கள் உள்ளுராட்சித் தேர்தல்களின் போது சம்மதம் தெரிவி ப்பார்களானால் அரசாங்கம் தான் நினைத்தவாறு சிலசலுகைகளை எம் மீது திணித்துவிட்டுஎமது நீண்ட கால அரசியல் பிரச்சனையை மழுங்கடிக்க அது அனுசரணையாக அமையும். அத்துடன் வடமாகாணமும் கிழக்கு மாகாணம் போல் பறிபோய்விடுமென விவரித்துள்ளார்.