Breaking News

அண்ணனும் தங்கையும் சடலங்களாக மீட்பு : நடந்ததென்ன ? (காணொளி இணைப்பு )

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த இருவரின் சடலங்களும் கடற்படை சுழியோ டிகளின் உதவியுடன் இன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை எனவும் ஒரு தாயின் வயி ற்றில் பிறந்த இரண்டு தந்தையர்க ளின் பிள்ளைகளான சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 28), பரமேஷ்வரன் மகாலெட்சுமி (வயது 19) ஆகிய என அடையாளம் காணப்பட்டுள்ளனர்


கொழும்பு கணேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த மேற்படி அண்ணன், தங்கை இருவரும் இவர்களின் தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக கடந்த 23 ஆம் திகதி பாக்றோ தோட்டத்திற்கு கெப் ரக வாகனம் ஒன்றில் சென்றுள்ளனர்.