Breaking News

கோப்பாயில் துயிலும் இல்ல முன் வீதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்து க்கு முன்பாக இராசபாதை வீதியில் தமிழீழ மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வு இன்று (27) முற்பகல் 11.30 மணிக்கு உணர்வு பூர்வமாக நடைபெற்று ள்ளது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நி கழ்வில் 3 மாவீரர்க ளின் தாயாரும் அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட வருமான அன்னை ஜெயக்கு மாரி சுடரேற்றினார்.

வடக்கு மாகாண அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் பங்கே ற்று துயில் கொள்ளும் ஆயிரக்கணக்கான வீரமறவர்களுக்கு அஞ்சலி செலு த்தியுள்ளனர். 

கோப்பாய் துயிலுமில்லத்தில் இராணுவ பிரிகேட் முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலேயே வீதியில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.