Breaking News

விழி நீர் ஏற்றத் தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லம்.!

தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயி லுமில்லம் மாவீரர் தினத்தை அனு ஷ்டிப்பதற்கு உணர்வெழுச்சியுடன் தயாராகி வருகிறது. கனகபுரம் மாவீ ரர் துயிலுமில்ல வளாகம் சிவப்பு மஞ்சல் கொடிகளால் அலங்கரிக்க ப்பட்டு, நுழைவாயில் அலங்காரங்கள மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பொதுச்சுடர், நினைவுச் சுடர்கள் ஏற்றுவத ற்கான ஏற்பாடுகளும் தற்போது உணர்வுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அதன் பின் அக வண க்கம் செலுத்தி பொதுச் சுடரும், ஏனைய நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டு மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.