தமிழன் நாட்டை ஆண்டிருந்தால் பௌத்த மக்களிற்கு பாதுகாப்பாம் – ஞான சார தேரர் !
தமிழன் நாட்டை ஆட்சி செய்திருந்தால் பௌத்த மக்களைச் சிறந்த வகையில் பாதுகாத்திருப்பான். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் கவலையடைந்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் அடிப்படை வாத்தில் இருந்து சுதந்திரம் பெறமுடியவில்லை.
புதிய அரசமைப்புத் தொடர்பாக பேசுபவர்கள் அதில் சரியா சட்டம், பர்தா விவகாரம் மற்றும் ஹலால் உள்ளிட்டவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதைக் கூறவில்லை. எமது தலைவர்களின் செயற்பாடுகள் மிகவும் இழிவாக உள்ளன. ஒரு தமிழன் நாட்டை ஆண்டிருந்தால் நிச்சயமாக இவ்வாறன அடிப்படை வாதத்திற்கு இடமளிக்காது பௌத்த மக்களை சிறந்த வகையில் பாதுகாத்திருப்பான் – என்றார்.