தவறுகள் நடந்தாலும் நல்லாட்சி தொடருமாம் - பிரதமர் ரணில்!
தவறுகள் நடக்கலாமென்ற போதிலும் நல்லாட்சியுடன் அரசாங்கம் தொட ர்ந்தும் முன்னோக்கி நகருமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க விவரித்து ள்ளார்.
அரசாங்கத்திற்கு, மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனத் தெரிவித்த பிர தமர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் தலைவர் என்ற வகையில் தாமும் தவிசாளரும், செயலாளரும் ஜனாதி பதி ஆணைக்குழுவின் விசாரணை களை சிறிதும் பயமின்றி எதிர்கொ ண்டதாக தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொட ர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முன்னிலையாகியிருந்தார்.
அதன் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்காவின் பிரதமர் ஒருவர் முதல்முறையாக இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார் எனத் தெரிவித்தார்.
ஆணைக்குழுவில் சாட்சியம் அளிப்பதற்கு வாய்ப்பைப் பெற்றுத்தந்த அதன் தலைவருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பல்வேறு விட யங்கள் தொடர்பில் விளக்கமளிக்க முடிந்ததாக தெரி வித்தார்.
தமது பொருளாதார கொள்கைகள் மற்றும் நாட்டிற்கு இழைக்கப்பட்ட பாதிப்புக்கள் மற்றும் ஏனைய விடய ங்கள் குறித்து தாம் விளக்கமளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எந்தவொரு அச்சமும் இன்றி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தாமும், செயலாளர் மற்றும் அமைச்சர்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியாகியுள்ளனர்.
மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால் நல்லாட்சியை தாம் முன்னோக்கி நகர்வோமெனவும் தவறுகள் நடக்கலாம் குறைபாடுகள் இருக்கலாம் என்ற போதிலும் நல்லாட்சியுடன் அரசாங்கம் முன்னோக்கி பயணிக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் ஒருவர் ஆணைக்குழுவொ ன்றின் முன், முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ளதுடன், ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் சுமார் ஒரு மணித்தியாலம் அவரை விசா ரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
அத்துடன் இன்றைய ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகளில் ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதி நிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் சிலரும் கலந்து ள்ளனர்.
2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறிகள் விற்பனையின் போது இடம்பெற்ற பாரிய நிதிமோசடி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இவ் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், மோசடியுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பேர்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவன உயரதிகாரிகளிடம் ஆணைக்குழு இதற்கு முன்னர் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.
இது தவிர, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர்களான ரவி கருணா நாயக்க, மலிக் சரமவிக்ரம மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோரும் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டி ருந்தது.
அத்துடன் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கான கேள்விகளை மின்னஞ்சல் மூலம் தொடுக்கப்பட்டதோடு அதற்கான பதிலை பிரதமர் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிவரை குறித்த ஆணை க்குழு சாட்சியப் பதிவுகளை மேற்கொண்டுள்ளதுடன் பரிந்துரைகளையும் முடி வுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய பலரிடமும் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணை க்குழு, கடந்த வாரம் இரகசிய பொலிஸாரிடம் விசாரணைகளை நடத்தியிரு ந்தது.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் முகாமையாளர் மற்றும் பேர்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரிகளுக்கிடையிலான தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளின் தரவுகளும் கிடைத்து ள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.