விடுதலைப்புலிகள் காலத்தில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான உறவு அம்பலமாகியது.!
விடுதலைப்புலிகளின் காலத்தில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமான உறவு நெருக்கமாக காணப்பட்டது.
இதனால் பிரச்சினைகளை உடனுக்கு டன் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ளக் கூடியவாறு காண ப்பட்டதென பொது அமைப்புகளின் பிரதி நிதிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தி லேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரி.கணேசநாதன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சிவில் சமூக பிரதி நிதிகள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றச் செயல்களை கட்டு ப்படுத்தல் மற்றும் சட்டம் ஒழுங்கை பேணுதல் போன்ற விடயங்கள் ஆரா யப்பட்டன.
கிராம மற்றும் மாவட்ட மட்டங்களில் சிவில் பாதுகாப்பு குழுக்களின் பங்களி ப்பின் அவசியம் பற்றியும், அவர்களின் ஒத்துழைப்பு குற்றச் செயல்களை கட்டு ப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒன்றாகுமென வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களை யும் தெரிவித்துள்ளனர். இதன்போது விடுதலைப்புலிகளின் காலத்தில் பொது மக்களுக்கும் அதன் பொலிஸ் துறைக்கும் இடையில் நெருங்கிய உறவு காண ப்பட்டது.
இது குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் தற்போது பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமான உறவில் இடை வெளி காணப்படுகிறது.
அதற்கு மொழியும் ஒரு தடையாக இருக்கிறது. இதனை கருத்தில் எடுக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.