மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் முன்னிலையாகவுள்ள - பிரதமர் ரணில் !
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விடயமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சாட்சியங்களைப் பெற தீர்மானித்துள்ளது.
இதன்படி அடுத்தவாரம் ஸ்ரீலங்கா வின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன் னிலையாகவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிணை முறி விநியோகம் குறித்து ஏற்கனவே ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் எழுத்து மூலம் பதில் அனுப்பியிருந்தார்.
மேலதிக தகவல் தேவைப்படுவதனால் பிரதமரை விசாரணைக்கு அழைத்தி ருப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஆட்சிக்குவந்ததன் பின்பு பெப்ரவரி மாதம் இலங்கை மத்திய வங்கியில் விநியோகம் செய்த பிணை முறிகள் விற்பனை யில் பாரிய நிதிமோசடியென தகவல்கள் கசிந்துள்ளன.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தலைமையிலான கோப் குழுவின் விசாரணையிலும் இந்த மோசடி ஊர்ஜிதப்படுத்தப்பட்டதை தொட ர்ந்து இதற்கான விசாரணையொன்று ஆர ம்பிக்கப்பட வேண்டுமென நிபந்தனை வலு ப்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆணை க்குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
விசாரணை ஆணைக்குழு, இலங்கை மத்திய வங்கி யின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்,
மோசடியுடன் சம்பந்த ப்பட்டதாக கூறப்படும் பேர்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜீன் அலோசியர் மற்றும் அந்த நிறுவன உயரதி காரிகளிடம் வாக்கு மூலத்தை பதிவாக்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர்களான ரவி கருணா நாயக்க, மலிக் சரமவிக்ரம மற்றும் கபீர் ஹா ஷிம் ஆகியோர் மீதும் விசாரணைகள் இடம்பெற்று ள்ளன. எனினும் விசாரணைக்கான காலத்தினை நீடிக்கு மாறு ஜனாதிபதி ஆணை க்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தது.
கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன டிசம்பர் 8 ஆம் திகதி வரை விசாரணை களை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். அதிகாரக் காலம் நீடிக்க ப்பட்டதை தொடர்ந்து குறித்த ஆணைக்குழுவினால் நேற்று விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.
இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார் என்பது குறி ப்பிடத்தக்கது.