ஆஷஸ் தொடரின் முதல் வெற்றியை தனதாக்கியது அவுஸ்திரேலியா !
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் பங்கு பெற்றுவதற்காக இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியா விற்கு விஜயத்தை முன்னெடுத்து ள்ளது. இத் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் கடந்த திங்கட் கிழமை ஆரம்பமாகியிருந்தது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முத லில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழ ந்து 302 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸ ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றுக்கொ ண்டது.
26 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றுக்கெண்டது.
170 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்தி ரேலிய அணி, நான்காம் நாள் ஆட்டத்தின் போது விக்கெட் இழப்பி ன்றி வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலிய அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான, டேவிட் வொர்னர் 87 ஓட்டங்களையும், ஃபேன்கி ராஃப்ட் 82 ஓட்ட ங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 1க்கு 0 என்ற கணக்கில் அவு ஸ்திரேலிய அணி முன்னிலையிலுள்ளது.