எகிப்தில் ஆயுததாரிகள் தாக்குதல் - 184 பேர் பலி, 125 பேர் காயம்!
எகிப்தின் சினாய் நகரில் அமைந்துள்ள பள்ளி வாசலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 184 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காய மடைந்துள்ளனர்.
சினாய் நகரிலுள்ள அல் ரவ்டா பள்ளி வாசலிலேயே இன்றைய தினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் தொழுகையின் பொருட்டு குறித்த பள்ளி வாசலில் குழுமியிருந்தவர்கள் மீது ஆயததாரி கள் சரமாரியான துப்பாக்கி பிரயோ கங்களை மேற்கொண்டதுடன், குண்டு த் தாக்குதலையும் நடாத்தியுள்ளனர்.
இத் தாக்குதலில் சுமார் 155 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாகவும், 125 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களின் பலரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுகின்றமை யினால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமெனத் தெரிவிக்கப்ப டுகின்றது. இத் தாக்குதலுக்கு இது வரை எந்த ஆயுததார இயக்கமும் பொறு ப்பேற்கவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.